Poems | கவிதைகள்
தேனீ
திருப்பியெழுதப்படச் சொற்களற்று குறிப்பெடுக்காது விடப்பட்ட முத்தங்களின் சிலிர்ப்புகள் அல்லது கொத்தும் சொண்டினால் முகத்தில் விழுந்த கீறல் காயங்கள் முழுக்க நின்னை ஆரத்தழுவும் பரவசத்தின் சொற்களென
மூன்றாவது சொல்
அகல விரியும் பெருங் கண்கள் இரண்டிலுமிருந்து காதலின் வேறு பெயர்களை உச்சரிக்கும் சிட்டுக்குருவிகள் படபடத்துப் பறந்து போகும் சத்தம் முதலாவது சொல்லாகவும்
கைகளும் கடலும் பனியும் நானும்
கைகள்: கழுத்தோரம் மெல்லக் கீழிறங்கி ஊசிமுனையென வருடும் ஐந்து சொற்களையும் ஊர்ந்து போகவிட்டு ரசிக்கும் நின் கவிதை இந்த அந்திக்குள்ளிருந்து
நித்திய வார்த்தை
மந்திரக் கோலென நீண்டு வளைந்த ஒரு மெல்லின எழுத்தினால் நீவிவிடப்பட்ட தாபத்திலிருந்து இன்னொரு நதி பிரவாகிக்கும் கவிதைக்குள் உள்நுழைய வழியற்று நிற்கிறது நான்
மகளெனும் மாமந்திரச் சொல்
இதே அறைக்குள் கூட உறங்கும் அழகி பற்றிய அல்லது இதுவரை கவிதைக்கென வாய்க்காத சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரெழுத்துக்களின் கோர்வை அவள்தானென்பதாக இக்கவிதை இருக்க முடியும்
காலிதின் குதிரை
கிடுகிடுத்து அதிரும் இந்தப் பின்னிரவின் குளம்பொலியில் காலிதின் குதிரை மேல் மோகங்கொண்டு விரைக்கிறது கவிதை
வெள்ளை இரவு
மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல பிடிக்க முடியாத காற்றும்
நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்
நினைவின் மடிப்புகளுக்குள் வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன?
யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்
கவிதை – 01 தொக்கி நிற்கவென இடப்படும் மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக் கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால் என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா
நபி
யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும் தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது.
கடல்
வலது தோளில் வந்தமர்ந்தபடி ஒவ்வொரு முகமாகக் கொத்தி மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கத் துவங்குகிறது மிச்சமிருந்த பின்பகல் அல்லது திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம்
Story of a Gloomy Dusk
The clay-pot filled of meas words unadorned,paints the fragrance of this very dusk on the inner wall
இருண்ட அந்தியொன்றின் கதை
அலங்கரிக்கப்படா வெறுஞ்சொற்களென நான் நிரம்பியிருக்கும் மட்பாத்திரம் தன் உட்சுவருக்குள் இந்தக் கரிய அந்தியின் வாசனையைப் பூசி வைக்கிறது
Poem of a Baby Sparrow
Frosty dawn wrapped in clouds completes sketching a sparrow on the nape of memory lusted on the deciduous leaves in yellow, it flapped renouncing the colours
Snow, Word or a Penance
Poems of a very solitary adhere like a leech on the crease of my inner wall tinted with blurred darkness in red Entrusting me for writing snow has started falling with its thousand poems, the night lays their eggs of secret words therein ME Scattered as; A cup frozen with tea stains, books read few […]
மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை
மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும் இருளைப் புகையச் செய்து காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன். படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது.
பசியெனப்படும் பெருஞ்சொல்
01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி இந்த நள்ளிரவு தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது. நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம் என
குருவிக் குஞ்சுக் கவிதை
நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது
பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்
இன்னமும் தட்டச்சு செய்யப்படாத விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது. வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண் இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள் அது என்னைப் பற்றியது
கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது
பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம், தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது.
பனி, சொல் அல்லது தவம்
மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற அறையின் சுவர் மடிப்புக்குள் யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன எழுதிவிட நானிருப்பதாக நம்பி ஆயிரங்கவிதைகளுடன் விழத்தொடங்கியிருக்கிறது பனி, இரவோ அதற்குள் போய் தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது.
பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்
இன்னமும் தட்டச்சு செய்யப்படாதவிடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்செட்டை கழற்றப்பட்ட கவிதை சுருண்டு படுக்கிறது. வெறும் ஒளியின் மங்கிய வர்ணங்கள் கொண்டுபின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்
பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்
எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை மீதமிருக்கும்அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடிப் பால்குடித்தவண்ணம் தாயின் வயிற்றைத் தடவியபடி படுத்துக்கொள்கின்றன.
13072016 – 01:00
முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள் சிறகடித்து வந்தமரும் வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது. வழமை போலவே காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது இரவும் காதலும் காடேகுதலும் மலையேறுதலுமான வினைகள் கொண்டு தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்;
நான் எனும் பேரின்பக் கவிதை
தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால் குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன உலர்ந்த அதிகாலையொன்றில் என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்
முத்தம்
விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம். காதலி உண்டு முடித்தவுடன் ‘எல்லைகளற்ற காதல்’ என உரு மாறினாள்
பூகோவ்ஸ்கி
01. காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில் சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான். ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது. பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை சுருட்டிக் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.
Me or the light from Silhouette
Unfolding the ensuing few lines of solitary, written up on this midnight; words of darkness, horrendous than me were sprinkled
Night is Playing
Night is playing, Collaging the papers of loneliness torn into pieces on all over my portrait.
இரவாகுதல்
என்னை இன்னொன்றாக்கும் வித்தையை இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும், ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள் கிடந்து தவிப்பதுமாக உழலுகிறது நானாகிய பாவம்.
கனவுகளிலிருந்து விடுபட்ட ஒரு அதிகாலையின் மூன்று சம்பவங்களாக இக்கவிதை இருக்கிறது
ஒன்று: இல்லாதிருத்தலை நட்டுவைத்து கனவுகளின் நிழலினை அருந்தியபடி உறங்கிப் போனேன். பூப்பூவாக நான் பூத்திருக்கிறது காலையில் -கனவுகளிலிருந்தே மதுவுக்கும் ஒரு முத்தத்தின் வழி போதை தொற்றியிருக்க வேண்டும்-
01. வடிவத்தை மறந்து பாதி வழியில் கைவிடப்படுகிற கவிதை
“…கரடு முரடான சொற்களை அவிழ்த்தெறிந்த அர்த்தங்கள் என்னை அணிந்து கொள்கின்றன…” “..மோகித்த தம் இதழ்களால் அந்தக் காயங்களின் தளும்புகள் மீது தடவித் தருகின்றன…” “..தூய அர்த்தங்களின் கிறக்கத்தால் இப் பின்னிரவில் நான் கிட்டார் இசைக்கிறது” “..கவர்ச்சியான சொற்களை அணியாத வெறும் இரவு என்னை மீண்டும் மீண்டும் சபிக்கிறது?”
அர்த்தமாகிய பெருங்கனவுக்குள்.. என்று பெயரிடலாமா என்று யோசிக்கிறேன்
என்னிலிருந்து விழும் சொற்கள் உதிர்ந்தேதான் விழுகின்றன என்பதாகவே அதிகம் ஏமாற்றப்படுகிறேன். நானென்பதோ அதிலிருந்து நிர்வாணம் கிடைக்கப்போகிறதென்ற பெருங்கனவில் அல்லது அர்த்தமென்பது வெளிப்படப் போவதான பேராவலில் ஏமாந்தபடியே திரும்பத் திரும்ப சொற்களை அணிந்து கொண்டும் உடுத்திக் கொண்டும் இருக்கிறது.
நின் முத்தத்தின் சுடர் அதிகாலையெனப் புரிந்து கொள்ளப்படும் பொழுதில் இக்கவிதை எழுதப்படுகிறது
நின் சுடர் பரவும் வெம்மையான பொழுதெனவும் துளித் துளியென உருகிக் கொண்டிருக்கும் பாவத்தின் சொற்களாகவும் எழுதிவிடவா இப்போதினை? அறிந்து கொண்டதன் பாவத்திடம் நினக்கென்று சொற்கள் எங்ஙணம் இருந்திருக்க நியாயம்?
புரிய முடியாத கவிதையின் காதலி
என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும் இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள். நானும் வழமை போல “எனக்கும்தான்” என்று உண்மையைக் கூறி அவளை ஆற்றுப்படுத்த விழைந்தேன்.
யசோதரா!!!
கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது. (அது எவ்வாறெனில்…) கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது. (அதனால்)
நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்
எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும் முத்தத்தின் வாயில் நான் ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது.
ஏதிலியின் நள்ளிரவு கட்டாந்தரையில் புரள்கிறது
தனித்தலைதலின் பானத்தை நான்காவது மிடறு அருந்துகையில் குதிகாலுயரும் ஆழ் முத்தத்தில் நான் நின் சொற்களுக்குள் ஆவியாகிக் கரைந்து போகிறது.
தலைவர் வாழ்ந்த கவிதை
சாகாவரம் பெற்ற மூன்றே மூன்று சொற்களைப் பிடித்துக்கொண்டுதலைவர் வாழ்ந்த கவிதைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.அவரின் சொற்கள் முழுதும் ஞானிகள் வாழ் இருப்பிடத்து இருள் கவிந்து போயிருக்கிறதுபிந்தைய நாட்களில் சிம்மாசனத்துக்கெனப் பயன்பட்ட நான்களின் பலிபீடம்,மனச்சாட்சிகளின் இரத்தக்கறை தோய்ந்த அழுக்குத் துணிகளால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது