பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம், தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது.
மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற அறையின் சுவர் மடிப்புக்குள் யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன எழுதிவிட நானிருப்பதாக நம்பி ஆயிரங்கவிதைகளுடன் விழத்தொடங்கியிருக்கிறது பனி, இரவோ அதற்குள் போய் தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது.
இன்னமும் தட்டச்சு செய்யப்படாதவிடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்செட்டை கழற்றப்பட்ட கவிதை சுருண்டு படுக்கிறது. வெறும் ஒளியின் மங்கிய வர்ணங்கள் கொண்டுபின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்
எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை மீதமிருக்கும்அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடிப் பால்குடித்தவண்ணம் தாயின் வயிற்றைத் தடவியபடி படுத்துக்கொள்கின்றன.
முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள் சிறகடித்து வந்தமரும் வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது. வழமை போலவே காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது இரவும் காதலும் காடேகுதலும் மலையேறுதலுமான வினைகள் கொண்டு தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்;
தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால் குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன உலர்ந்த அதிகாலையொன்றில் என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்
விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம். காதலி உண்டு முடித்தவுடன் ‘எல்லைகளற்ற காதல்’ என உரு மாறினாள்
01. காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில் சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான். ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது. பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை சுருட்டிக் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.
Unfolding the ensuing few lines of solitary, written up on this midnight; words of darkness, horrendous than me were sprinkled
Night is playing, Collaging the papers of loneliness torn into pieces on all over my portrait.

காலம், சொற்கள், அர்த்தம், இரவு, அதிகாலை, பனி, வசந்தம், அதீத காதல் அதற்கென எனக்குள்ளிருக்கும் தெருப்பாடகன் காதலின் உச்சப் பரவசத்தில் கூவியழைக்கும் ஹூ என்பன குறித்த என் தத்துவ நம்பிக்கைகளின் பிரதிமைகள் கவிதைகளுக்குள்ளிருந்து வேறாக்கிட முடியாதபடி விரிந்து கொண்டேயிருக்கின்றமை கவிதை மனம் பற்றிய ஒற்றை விவரணத்துக்கு இடந்தருவதாயில்லை. அதனாலேயே கவிதைக்குள் நடமாடும் என்னை இப்படி விவரிப்பது சில தருணங்களுக்கு சாத்தியமாகிறது. “எப்படியோ மீட்டுவிட முடியுமென்று நம்பி சொற்களுக்கே தன்னைத் தின்னக் கொடுத்திருக்கும் ஏதிலி; விழித்திருக்கும் இரவுகளின் தெருக்களுக்குள் முத்தங்களைக் கூறி விற்கும் காதலன்; ஹூ விலிருந்து பிரிந்த முத்தம்.”