மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும்  இருளைப் புகையச் செய்து  காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன். படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது.

பசியெனப்படும் பெருஞ்சொல்

பசியெனப்படும் பெருஞ்சொல்

01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி இந்த நள்ளிரவு  தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது. நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம்   என 

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும் தட்டச்சு செய்யப்படாத  விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது.   வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு  பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்  இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்   அது என்னைப் பற்றியது

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது

கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது

கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது

பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம், தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது.

பனி, சொல் அல்லது தவம்

பனி, சொல் அல்லது தவம்

மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற அறையின் சுவர் மடிப்புக்குள்  யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன எழுதிவிட நானிருப்பதாக நம்பி  ஆயிரங்கவிதைகளுடன் விழத்தொடங்கியிருக்கிறது பனி, இரவோ அதற்குள் போய்  தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது.

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும் தட்டச்சு செய்யப்படாதவிடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்செட்டை கழற்றப்பட்ட கவிதை சுருண்டு படுக்கிறது.வெறும் ஒளியின் மங்கிய வர்ணங்கள் கொண்டுபின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்

பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்

பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்

எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை  வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை மீதமிருக்கும்அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடிப் பால்குடித்தவண்ணம் தாயின் வயிற்றைத் தடவியபடி படுத்துக்கொள்கின்றன.

13072016 – 01:00

13072016 – 01:00

முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள் சிறகடித்து வந்தமரும் வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது. வழமை போலவே காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது இரவும் காதலும் காடேகுதலும் மலையேறுதலுமான வினைகள் கொண்டு தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்;

நான் எனும் பேரின்பக் கவிதை

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால் குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன உலர்ந்த அதிகாலையொன்றில் என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்