பனி,சொல் அல்லது தவம்
රු300.00
“கண்களுக்கும் ஆன்மாவிற்குமிடையே
பொழிகிற – பனி
புரிதலுக்கும் புரியாமைக்கும் நடுவில்
மறைந்திருக்கும் நுண்ணுணர்வுகளின் – சொல்
திளைப்பிற்கும் காயங்களுக்கும்
நடுவேயான அனுபவத்தின் – தவம்
ஒலிக்கும் அரூபத்திற்கும் இடையே
தாவுகின்ற – இசை
ஞானத்துக்கும் காதலுக்குமான பதீக் கவிதைகள்”
-அனார்-
Description
“பயணங்கள், பொருளுக்கான உழைப்பு, தூர தேச அலைக்கழிப்புக்கள், பெரு நகரங்களின் இருள், அவற்றுக்குள் தேங்கிக் கிடக்கும் வாழ்வின் நுண் கவிதைகள், கனவுகள், காலம் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மர்மமான அடுத்த நிமிடங்கள், வெவ்வேறு மனிதர்கள், இன்னமுமே வாக்களித்த விடுதலையைத் தராது ஏமாற்றிக்கொண்டிருக்கும் தத்துவங்கள், காதல் மற்றும் அதன் அதீத நிலை என ஒரு தேசாந்திரி வாழ்வின் அத்தனை வாயில்களுக்குள்ளாலும் நுழைந்திடும் சாவிகளாகவும் வெளியேறும் ஒளிச் சுடராகவும் என் கவிதைகளே எனக்கு இருந்து வருகின்றன. இந்தத் தொகுப்பை வாசிக்கும் உங்களையே நான் அதற்குச் சாட்சியாகவும் நிறுத்த விரும்புகிறேன்” – பதீக் – (முன்னுரையிலிருந்து)
பதிப்பகம் - காலச்சுவடு இந்தியா | முதற்பதிப்பு டிசம்பர் 2018 | பக்கங்கள் - 72