யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை – 01   தொக்கி நிற்கவென இடப்படும்  மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன   தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக்  கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால்  என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா