பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும் தட்டச்சு செய்யப்படாத  விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது.   வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு  பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்  இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்   அது என்னைப் பற்றியது

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது